September 01, 2008

மம்தா அரங்கேற்றி வரும் நாடகம்

-கி.இலக்குவன்

சிங்கூர் கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களைத் திருப்பித்தர வேண்டும் என்ற பெயரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க அரசுக்கு எதிராக கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்.இதற்காக ஆயிரக்க ணக்கான தனது ஆதரவாளர்களைத் திரட்டி தொழிற்சாலை நுழைவாயிலில் மறியல் போன்றவற்றை நடத்தி வரு கிறார்.தேசிய நெடுஞ்சாலையிலும் மறியலை நடத்தி போக்குவரத்தை நிலை குலையச்செய்துள்ளார். காவல்துறை தலையிடுவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி வன்முறையைக்கட்டவிழ்த்து விட்டு ரத்தக்களறியை ஏற்படுத்தி துப் பாக்கிச்சூடு போன்றவைகளுக்கு வழி வகுப்பதன் மூலம் மேற்கு வங்க அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.

வெளியிலிருந்து திரட்டப்பட்ட பல்லாயிரம் பேருக்கு சாப்பாடு போடு வதற்காக ஒரு பெரிய சமையல் கூடமும் இயங்கி வருகிறது.கார் தொழிற்சாலைக்கு எதிரில் அமைந்துள்ள திடலில் 50 மீட்டர் தொiவில் இந்த தற்காலிக சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.சமையல் வேலையிலும் அவர்களுக்கு உதவி செய்யவும் சுமார் 50 பேர் பணியமர்த் தப்பட்டு உள்ளனர்.கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து வியாழன் வரையி லான 5 நாட்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுமார் 90000 பேர் உணவு அருந்தியுள்ளனர். தினமும் இரண்டரை லட்சம் ரூபாய் வீதம் இதுவரை பத்து லட் சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட் டுள்ளது. விடியற் காலை நான்கு மணிக் குத் துவங்கும் சமையல் வேலை அந்திசாயும் நேரம் வரை நீடிக்கிறது.

போராட்டக்காரர்களின் முகாம் ஒரு பெரிய திருவிழா நடைபெறும் இடம் போலக்காட்சி அளிக்கிறது. ரிக்ஷா ஓட்டி கள் பெரும் எண்ணிக்கையில் இயங்கி வருகின்றனர் பஸ் வேன்,கார் போன்றவை வருவதும் போவதுமாகக்காட்சி அளிக் கின்றன.ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக் கும் நல்ல வியாபாரம் நடைபெற்று வருகிறது.

கையகப்படுத்தப்படாத நிலத்துக்காக நந்தி கிராமில் வன்முறையைத்தூண் டிவிட்டு 10க்கு மேற்பட்டவர்களின் மர ணத்துக்குக் காரணமாக இருந்தனர். இடது முன்னணிக்கு எதிராக நாடு தழுவிய அவதூறுப்பிரச்சாரத்தில் அப்போது ஈடுபட்டவர்கள் சிங்கூர் பிரச்சனை யைப் பெரிதாக ஊதிவிட்டு அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள். பிரச்ச னையைப் பேசித்தீர்க்கலாம் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்து வரும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். நந்தகிராமம் பிரச்ச னையில் மேற்கு வங்க அரசு நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க தவறிவிட்ட தாக விமர்சனம் செய்த கவர்னர் கோபால கிருஷ்ண காந்தியும் பிற மனித உரிமைக் காவலர்களும் இப்போது எங்கே சென் றார்கள் என்று தெரியவில்லை.

சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு சிங்கூர் கார் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வரும் மம்தா கும்பலின் நடவடிக்கைகளை ப்பற்றி எதுவும் கூறாமல் அவர்கள் மவுனவிரதத்தைக் கடைப்பிடிப்பது ஏன் என்பது நடுநிலையாளர்கள் எழுப்ப வேண்டிய கேள்வி.

ஆதாரம் : ‘டைம்ஸ் ஆப் இந்தியா’

August 09, 2008

எளிமை அவரது இயல்பு! இனிமை அவரது பண்பு!!


-கே.வரதராசன்


1974ல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாள ராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய கவுன்சில் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டேன். ஜலந்தரில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில்தான் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்களை நேரடியாக பார்த்தேன்.

எந்தவொரு பிரச்சனையாக இருந்தா லும் அதை பொறுமையாக, நுட்பமாக அணுகுவது அவருடைய சிறப்புப்பண்பு என்பதை அப்போது அறிந்தேன். தமிழ கத்தில் நாராயணசாமி நாயுடு தலைமை யில் இலவச மின்சாரம் கேட்டு விவசா யிகள் போராடிக் கொண்டிருந்தார்கள். கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து நான் பேசியபோது, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தோழர்கள் எதிர்ப்பு தெரி வித்தார்கள். இலவச மின்சாரம் கேட்பது பணக்கார விவசாயிகளுக்குத்தான் சாதகமாக இருக்கும். நம்முடைய சங்கம் ஏழை, எளிய விவசாயிகளை சார்ந்துதான் இருக்க வேண்டும் என்று கூறினர்.

அப்போது தலையிட்டு பேசிய தோழர் சுர்ஜித், நம்முடைய சங்கம் ஏழை, எளிய விவசாயிகளைச் சார்ந்துதான் நிற்க வேண்டும். அந்த அடித்தளத்தில்தான் கிராமப்புற இயக்கம் கட்டப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் தமிழகத்தில் தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை ஏற்பது யாராக இருந்தாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் ஏழை எளிய விவசாயி களும் அடக்கம். இதை கருத்தில் கொள் ளாமல் கே.வரதராசன் முன்வைத்த கருத்தை விமர்சிப்பது சரியல்ல.

மாறாக இப்போது எழுந்திருக்கக் கூடிய விவசாயிகளின் நியாயமான கோரிக்கை அடிப்படையிலான போராட் டத்திற்கு வடிவம் கொடுத்து இணைந்து போராடி அதன் மூலம் வழிகாட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்ற முடியாது. இந்தியாவில் விவசாய வளர்ச் சியில் ஏற்ற இறக்கம் உண்டு. மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா போன்ற இடது சாரிகள் அரசு அமைந்துள்ள மாநிலங் களில் நிலச்சீர்திருத்தத்தின் மூலம் நிலக் குவியல் உடைக்கப்பட்டு நிலப்பிரபுத் துவம் ஒடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங் களில் விவசாய உற்பத்தியில் நவீன தொழில்நுட்ப முதலாளித்துவ முறை பெருமளவு வளர்ந்துள்ளது.

பீகார், உ.பி. போன்ற மாநிலங்களில் நிலப்பிரபுத்துவ முறை அப்படியே தொடர் கிறது. இந்த வேறுபாடுகளை அழகாக எடுத்துக்காட்டிய சுர்ஜித் அவர்கள், அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கேற் பவே கோஷங்களை உருவாக்க வேண் டும், ஸ்தலப்போராட்டங்களை நடத்த வேண்டும் என்றார். சற்று வேடிக்கை யான தொனியில் “வங்காள மருந்து தமிழ் நாட்டுக்கு ஒத்துவராது” என்றும் கூறி னார். “வேற்றுமையில் ஒற்றுமை” என்பது மொழி மற்றும் தேசிய இனங்களின் அடிப்படையில் மட்டுமின்றி விவசாய உற்பத்தி முறையிலும் உள்ளது என்று விளக்கினார்.

1984ம் ஆண்டு தோழர் சுர்ஜித் மற்றும் அவரது துணைவியார் சோவியத் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். நானும் அவர்களோடு சென்றிருந்தேன். ஒருமாத காலம் நீடித்த இந்த சுற்றுப்பயணத்தின் போது திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் தன்மை, நீர்ப்பாசனம், பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு கேள்வி களை எழுப்பினார். தமிழ்நாட்டில் ஒருமா வட்டத்தை பற்றி அறிந்து கொள்ள அவர் காட்டிய ஆர்வம் மிகவும் அரிதான ஒரு குணாதிசயமாகும். மிகப்பெரிய தலைவ ரான அவர் விவசாய சங்க ஊழியரான என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு விடை காணும் வகையில் நானும் பல்வேறு விஷயங்களை தேடித்தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை அவர் உருவாக் கினார். உண்மையில் சொல்லப்போனால் அந்த ஒருமாத கால சுற்றுப்பயணம் ஒரு ஊழியர் பயிற்சி முகாமாகவே எனக்கு அமைந்தது.

அவரது இன்னொரு சிறப்பு எளிமை, சிக்கனம். தனிப்பட்ட முறையில் அவர் சிக்கனமாக இருந்தார் என்பது மட்டு மல்ல இயக்கமும் கூட அவ்வாறே இருக்க வேண்டும் என்று விடாது வலி யுறுத்துவார். விவசாயிகள் சங்க மாநிலக் குழுக்களுக்கு அலுவலகம் கட்ட வேண் டும் என்று கோரிக்கை வந்தால் அவர் எழுப்பும் முதல் கேள்வி, விவசாயிகள் சங்கத்திற்கு எத்தனை ஊழியர்கள் உள் ளனர்? அவர்களது மாத ஊதியம் என்ன? அது முறையாக வழங்கப்படு கிறதா? என்பதோடு கட்டிடம் கட்ட யாரிடம் நிதி வசூல் செய்வீர்கள் என்றும் கேட்பார்.

விவசாயிகள் சங்கம் பலமாக உள்ள மாநிலங்களிலிருந்து வசூல் செய்து பலவீனமான மாநிலங்களுக்கு ஊழியர் அலவன்சுக்கு வழங்குவது என்ற நடை முறையை துவக்கி வைத்தவரும் தோழர் சுர்ஜித்துதான். அந்த அடிப்படையில் அகில இந்திய விவசாயிகள் சங்க மையத்திலிருந்து இப்போதும் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.55 ஆயிரம் ஊழியர் அலவன்சாக வழங்கப்படுகிறது.

1984ம் ஆண்டுக்குப்பிறகு பலமுறை என்னை சந்திக்கும் போதெல்லாம் டில்லிக்கு வந்துவிட வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார். 1997ல் சந் திக்கும் போது இனியும் உனக்கு அவகா சம் கொடுக்க முடியாது. உடனடியாக டில்லி வந்துவிட வேண்டும் என்று கூறினார்.

விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பணிக்காக டில்லி சென்றபிறகு சங்கத்திற்கு என்று சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும், கார் வாங்கவேண்டும் என்று கூறியபோது, விவசாயிகள் சங்கத் திற்கு அதிகமான ஊழியர்களை நியமிப் பதும் அவர்களது குடும்பத்தை பாதுகாப் பதும்தான் மிக முக்கியம். கட்டிடம், கார் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

தனிப்பட்ட தோழர்கள் தவறு செய்யும் போது அவர்கள் செய்த தவறை சுட்டிக் காட்டி, உணர வைத்து அவர்களை பாது காப்பது என்பதுதான் அவரது அணுகு முறை. இந்த அணுகுமுறை ஏராளமான தோழர்களை காப்பாற்றியுள்ளது.

தவறு செய்த தோழர்களை திருத்த அவர் எடுத்துக்கொள்ளும் நேரமும் காட்டும் பொறுமையும் யாராலும் எதிர் பார்க்க முடியாத ஒன்று. அந்த அளவுக்கு ஊழியர்களை பாதுகாப்பதில் அவர் அக்கறை காட்டுவார்.

1936ம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தை துவக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர். அன்று துவங்கி விவசா யிகள் இயக்கத்தை வளர்ப்பதில் அவர் ஆற்றிய பணி அளப்பரியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தினங்களில் அவரும் ஒருவர். கட்சியை உருவாக்கிய தலை வர்கள் மார்க்சிய, லெனினிய தத்துவத் தில் அறிவுக்கனல்களாக திகழ்ந்தவர் கள். இதில் சுர்ஜித்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் மார்க்சிய தத்துவத்தை கள அனுபவத்தோடு பொருத்துவதில் தனித்திறமை கொண்டவர். அவரது உழைப்பும், பொறுமையும்தான் அவரை கட்சியின் உயர்ந்த பொறுப்புகளுக்கு கொண்டு சென்றது.

1977க்குப் பிறகு மத்திய அரசியலில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங் களில் அவர் மையப்புள்ளியாக இருந்தார். காங்கிரசுக்கு மாற்றாகவும் மதவெறி சக்திகளுக்கு மாற்றாகவும் பல்வேறு கட்சிகளை ஈர்த்து அவரால் அணிவகுப்பு களை உருவாக்க முடிந்தது. அதனால் தான் அவரை பத்திரிகைகள் “கிங் மேக் கர்” என்று அழைத்தன. ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர் தம்மை ஒரு எளிய விவசாயி என்று அழைத்துக்கொள்ளவே பிரியப்பட்டார்.

July 07, 2008

-பேராசிரியர் கே. ராஜு

நம் நாட்டு அணுஉலைகளுக்கு யுரேனியம் கிடைப்பதில் பற்றாக்குறை இருக்கிறது. இந்தக் காரணத்தைச் சொல்லியே பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்றோர் உடனடியாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்திற்குச் செல்வதுதான் யுரேனியம் கிடைப்பதற்கு ஒரே வழி என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மற்றொரு புறம் நமது அணுசக்தித் துறை உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தைப் பெறுவதற்கு எல்லாவிதங்களிலும் முயற்சி எடுத்து வருகிறது. அதற்குப் பலனும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

அணுசக்தித் துறையின் கீழ் உள்ள அரசு கனநீர் குழுமம் (ழநயஎல றுயவநச க்ஷடியசன) பாஸ்ஃபோரிக் அமிலத்திலிருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுப்பதற்கான ஒரு தொழில்நுட்ப ஆலையை நிறுவ உள்ளது. டிராம்பேயில் உள்ள ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் பாஸ்பேட் பாறையிலிருந்து (சடிஉம யீாடிளயீாயவந) பாஸ்ஃபோரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.

கடல்நீரிலிருந்தும் அணுக்கழிவிலிருந்தும் மரபணு உயிரியல் முறைகளைப் பயன்படுத்தி யுரேனியத்தைத் திரும்பப் பெறும் முயற்சியிலும் கணிசமான முன்னேற்றம் அடைந்திருப்பதாக பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அணுசக்தித் துறையின் கீழ் உள்ள மற்றொரு அரசு நிறுவனமான இந்திய ரேர் எர்த் நிறுவனமும் (ஐனேயைn சயசந நுயசவா டுவன) பாஸ்ஃபோரிக் அமிலத்திலிருந்து யுரேனியத்தைப் பிரித்தெடுக்கும் ஆலைகளை நிறுவ இருக்கிறது. அது மட்டுமின்றி, தோரியம் ஹைட்ராக்ஸைடிலிருந்தும் உலோகத் தயாரிப்புக் கழிவுகளிலிருந்தும் யுரேனியம் பெறுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

போதுமான அளவு யுரேனியத்தை உற்பத்தி செய்தே தீருவது என்ற சவாலை கனநீர் குழுமம் ஏற்றுக் கொண்டுள்ளதால், கூடிய விரைவில் அணுஉலைகளுக்குத் தேவையான யுரேனியத்தைப் பெறமுடியும் என்ற சாதகமான நிலை தோன்றியுள்ளது. கூடுதல் அழுத்த கனநீர் உலைகளிலிருந்து (ஞசநளளரசளைநன ழநயஎல றுயவநச சுநயஉவடிசள) தற்போதைய இலக்கான 10,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமல்ல அதற்கும் அதிகமாகவே உள்நாட்டு வளங்களிலிருந்து உற்பத்தி செய்துவிட முடியும்.

கடல் நீரில் யுரேனியம் இருப்பது முன்பே தெரிந்த விஷயம்தான். ஆனால் கடல் நீரில் மிகக் குறைந்த விகிதத்தில் மட்டுமே இருக்கும் யுரேனியத்தைப் பிரித்தெடுக்கச் செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் இதுவரை அதில் முன்னேற்றம் இல்லாமலிருந்தது. தற்போது இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரத்தியேகமான முறையில் தயாரிக்கப்படும் பாலிமர் வழியாகக் கடல் நீரை அனுப்பினால் யுரேனியத்தை மட்டும் உள்வாங்கிவிட முடியும் என பாபா ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. கடல் நீரில் 4.6 பில்லியன் டன்கள் யுரேனியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த யுரேனியத்தை அதிக செலவின்றிப் பெற்றுவிட முடியும்.

அது சரி, ஒரு சந்தேகம். இதெல்லாம் சாதாரண மக்களான நமக்கே பத்திரிகைகள் மூலம் தெரியவந்துள்ளதே, மிக உயர் பதவியில் இருக்கும் மன்மோகன்சிங்கிற்கும் சூப்பர் விஞ்ஞானியாக நம் மக்களால் போற்றப்படும் அப்துல் கலாமிற்கும் தெரியாமலா இருக்கும்? பின் ஏன் யுரேனியத்தையும் அணுஉலைகளையும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமென்று துடிக்கிறார்கள்?

நம் நாட்டு விஞ்ஞானிகள் உயிரைக் கொடுத்து உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்களது உற்சாகத்தையெல்லாம் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்தே தீருவேன் என்று வறட்டுப் பிடிவாதம் பிடிக்கும் மன்மோகன்சிங்கிற்குப் பாடம் சொல்லித்தரப் போவது யார்?

July 05, 2008

உரப்பற்றாக்குறை - காரணம் என்ன?


-ஜி.ஆனந்தன், தூத்துக்குடி

பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்திய மன்மோகன் சிங் அரசாங்கம், புதிய உர விலை கொள்கையையும் அறிவித்துள்ளது. ஒவ் வொரு காம்ப்ளக்ஸ் உரத்தையும் என்ன விலைக்கு விற்கலாம் என்பதை இந்த மாத இறுதிக்குள் வெளியிடுவதாக கூறியுள்ள நிதியமைச்சர் இந்த புதிய உரவிலைக் கொள்கை ஏப்ரல் 1 முதல் அமலாக் கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்கள் தாறுமாறாக உயர்ந்ததன் விளைவாக இரசாயன உரங்களின் இடுபொருட்களின் விலையும் கடுமை யாக உயர்ந்துள்ளன. உதாரணமாக டி.ஏ.பி உரம் தயா ரிக்க சல்பர் மற்றும் ராக் பாஸ்பேட் மிகவும் அவசிய மாகும்.

பிப்ரவரிக்கு பின் தற்போது மேலும் மேலும் பெட்ரோலியப் பொருட்கள் விலை விண்ணைத் தொட இந்த இடு பொருட்களின் விலையும் விண் ணைத் தொடுகின்றது. ஆகவே டி.ஏ.பி. உரத்தின் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. இந்த இடத்தில்தான் 1991ல் கண்மூடித்தனமாக ஆரம்பிக் கப்பட்ட தாராளமயக் கொள்கைகள் விளையாட்டு பற்றியும், உரமானியக் கொள்கைகள் பற்றியும் விளக்க வேண்டியுள்ளது.

உரமானியத்தின் வரலாறு

1977ல் முதல் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை ஒட்டி உர நிறுவனங்கள் உற்பத்தி தொடர ஆரம்பிக்கப்பட்டதுதான் உரமானியம். உரங்களை உற்பத்தி செலவுக்கே விற்பனை செய்ய முடியாதா கையால், உற்பத்தி செலவுக்கும் குறைவான விற் பனை விலைக்கும் உள்ள இடைவெளியே உரமா னியம் ஆகும்.

உரமானியத்திற்காக அரசு செலவிட்டதில் உள் நாட்டு உற்பத்திக்கு அதிகமாகவும் இறக்குமதிக்கு குறைவாகவும் இருந்தது. இது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே. ஏனெனில் அப்பொழுது சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை குறைவாக இருந்த தற்கு முக்கியமான காரணம் உலகின் இரண்டு பெரிய சந்தையான சீனாவும், இந்தியாவும் உரம் இறக்குமதியை மிகமிக குறைவாக செய்ததுதான். உள்நாட்டின் தேவை பெரும்பாலும் உள்நாட்டு உற்பத்தியின் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டதால், இறக்குமதிக்கான தேவை குறைவாகவே இருந்தது. உள்நாட்டு உற்பத்தி விலை, ஏன் பன்னாட்டு விற் பனை விலையை விட அதிகமாக இருந்தது என்றால், உள்நாட்டின் பல உர நிறுவனங்கள் யூரியா உற்பத் திக்கு இடுபொருளாக நாப்தா என்ற பெட்ரோலியப் பொருளை இறக்குமதி செய்தன. அவ்வாறு இறக்கு மதி செய்யப்பட்ட நாப்தாவில் அரசு கலால்வரி மற்றும் சுங்கவரி என பல்வேறு வரிகளை மிக அதிகமாக விதித்ததின் விளைவேயாகும். இந்த இறக்குமதி வரிகளை எடுத்துவிட்டு சர்வதேச சந்தை விலைக்கே உர நிறுவனங்கள் இறக்குமதி செய்யஅனுமதிக்க வேண்டுமென உர நிறுவனங்களின் கூட்டமைப்பு வேண்டுகோளை அன்றைய மத்திய அரசு நிரா கரித்தது. அதற்கு காரணம் இறக்குமதி வரிகளின் மூலம் கிடைத்த வருமானம் மானியமாக வழங்கி யதைவிட அதிகமாக இருந்ததேயாகும்.

சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை குறை வாக இருந்தவுடன், அன்றைய தேசிய ஜனநாயக கூட்டணிஅரசு உள்நாட்டு உற்பத்திக்கு பதிலாக இறக்குமதி செய்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தது. அதன் காரணமாக உள்நாட்டில் இயங்கிக் கொண்டி ருந்த பல உர நிறுவனங்களை முடக்கினர். இந்திய உணவுக் கழகத்தின் தால்ச்சர்,கோரக்பூர், சிந்திரி மற்றும் கோர்பா உரத் தொழிற்சாலைகளையும், இந் துஸ்தான் உர நிறுவனத்தின் பாருணி, துர்காபூர் மற்றும் ஹால்டியா தொழிற்சாலைகளையும் மூடிவிட 2002ம் ஆண்டு பாஜக அரசு முடிவெடுத்தது. இந்த தொழிற்சாலைகளின் மொத்த உற்பத்தி திறன் 50 லட்சம் டன் யூரியா என்றும், அரசின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் அந்தக் கொள்கை முடிவுக்கு எதிராக “பெர்ட்டிலைசர் வொர்க்கர்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா” அறிவித் தது. அரசின் முடிவுகளுக்கு எதிராக உரத் தொழி லாளர்களை திரட்டி போராடி வந்தது.

மேலும், யூரியாவிற்கு இடுபொருளான இறக்கு மதி செய்யப்பட்ட நாப்தாவிற்கு பதிலாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தலாம். நமது நாட்டின் வட மாநிலங்களில் குஜராத்திலிருந்து வடக்கு உத்தரப்பிரதேசம் வரை சுமார் 2000 கிலோ மீட்டர் தூரத்திற்கு மும்பை கடல்பகுதியில் கிடைக்கும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்பட்டு பல உரநிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு டன் யூரியாவின் உற்பத்தி செலவு பல மடங்கு குறையும். உதாரணமாக மார்ச் 2007ல் ஒரு டன் யூரியாவின் உற்பத்தி செலவு தேசிய உரத் தொழிற்சாலையின் விஜெய்ப்பூர் 1ல் ரூ.5,078ஆக இருந்தது. அந்த தேதியிலேயே ஸ்பிக் நிறுவனத்தில் ஒரு டன் யூரியாவின் உற்பத்தி செலவு ரூ.20,050 ஆக இருந்தது. இந்த இரண்டுக்கும் வித்தியாசத்திற் கான காரணம் இடுபொருளாகும். தேசிய உரத் தொழிற்சாலை இயற்கை எரிவாயுவையும், ஸ்பிக் நிறுவனம் நாப்தாவையும் இடுபொருளாக பயன்படுத் தியது. ஆகவே, இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி னால் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு குறைவான விலையில் உரம் தயாரித்து அளிக்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், அன்றைய அரசு இயற்கை எரிவாயுவை உரத் தொழிலுக்கு அளிப்ப தற்கு பதிலாக தனியார் மின் தயாரிப்பாளர்களுக்கு வழங்க முன்னுரிமை அளித்தது. ஏற்கெனவே நிலக்கரியில் மிகவும் மலிவாக மின் உற்பத்தி செய்து வரும்பொதுத்துறை நிறுவனங்களுக்கு பதிலாக மிக அதிக விலை கொடுத்து இந்த தனியார் மின் துறை யை மத்திய அரசு ஊக்குவித்தது. இராமநாதபுரத்தில் கிடைக்கும் இயற்கை எரிவாயு குழாய் மூலம் ஸ்பிக் நிறுவனத்திற்கு வழங்க வேண்டுமென இந்தக்கட்டு ரையாளர் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது ஸ்பிக் எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் சிந்திரியில் நடைபெற்ற பெர்ட்டிலைசர் வொர்க்கர்ஸ் பெடரேசன் ஆப் இந்தியாவின் தேசிய சிறப்பு மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்தத் தீர் மானம் அன்றைய பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் பெடரேசன் சார்பில் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், இறக்குமதியை நம்பும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இந்தியா உரம் இறக்குமதி செய்ய ஆரம்பித்தவுடன் சர்வதேச சந்தையில் உரத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. இறக்குமதி செய்வதற்கு முன் 2002-03ல் ஒரு டன் னின் விலை 110 டாலராக இருந்தது. இறக்குமதி ஆரம்பித்தவுடன் 2004ல் 200 டாலரைத் தொட்டது. பின்னர் ஏப்.2007ல் 335 டாலராகவும், பிப்.2008ல் 410 டாலராகவும் உள்ளது. நாப்தாவின் விலை 2006ல் டன் ஒன்றிற்கு 572 டாலராக இருந்தது. தற் போது 1150 டாலராக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் யூரியாவின் இறக்குமதியும் உயர்ந்துள்ளது. 2004-05ல் 6.41 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்த அரசு 2007-08ல் 69.63 லட்சம் டன் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு வந்தது. இதற்கு முக் கியக் காரணம் ஸ்பிக் போன்ற நாட்டின் பல பகுதி களில் உள்ள நாப்தா இடுபொருளாக உள்ள உர நிறுவனங்கள் உர உற்பத்தியை நிறுத்தியதுதான். பெட்ரோலியப் பொருட்களில் முன்னேறிய நாடு களின் நிறுவனங்கள் கூட்டாக அடிக்கும் கொள்ளை மற்றும், இந்தியா தனது உரத்தேவைக்கு இறக்கு மதியையே நம்பி இருக்க வேண்டிய நிலை போன்ற வற்றால் சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை ஒவ்வொரு நாளும் கட்டுப்பாடின்றி உயர்ந்து கொண் டிருக்கிறது.

இதற்கிடையே இடதுசாரிகள் மத்திய அரசை உரக்கொள்கையில் மாற்றம் கொண்டுவர வலி யுறுத்தினர். குறிப்பாக மூடப்பட்ட உர நிறுவனங் களை திறக்க வேண்டுமெனவும், இயற்கை எரிவாயு வை உர நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வந்தன. இதன் காரணமாக தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மூடப்பட்ட இந்திய உணவுக் கழக தொழிற்சாலைகளையும், இந்துஸ்தான் உரத்தொழிற் சாலைகளையும், இயக்கத் தேவையான நடவடிக் கைகளை எடுக்க முடிவெடுத்துள்ளது ஒரு வரவேற் கத்தக்க அம்சமாகும்.

ஆனால் நடைமுறையில் இந்த கொள்கை அமலாகவில்லை. உதாரணமாக கிருஷ்ணா-கோதா வரி படுகையில் (ஆந்திர மாநிலம் கடப்பாவில்) கிடைத்த இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் சென்னைக்கும் அங்கிருந்து தூத்துக்குடி வரை கொண்டு வருவதாக தெரிவித்த ரிலையன்ஸ் நிறு வனம் பின்னர் தனது திட்டத்தை மாற்றி ஆந்திராவில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை குஜராத்தில் தனது சுத்திகரிப்பு ஆலை உள்ள ஜாம்நகர் வரை கொண்டு செல்ல குழாய் அமைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய இயற்கை எரிவாயு கிடைக்க முடியாத சூழல் உள்ளது. மேலும் கடலூரில் இயற்கை எரிவாயு கமிஷன் (ஓஎன்ஜிசி) கச்சா எண்ணெய்யை எடுத்துக்கொண்டு இயற்கை எரி வாயுவை எரித்துவீணடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாளுக்கு எரிந்து வீணாகும் இயற்கை எரிவாயு வின் அளவு ஸ்பிக் உர நிறுவனத்தின் ஒருநாள் இடு பொருள் தேவையாகும். மாநில அரசும் மத்திய அரசும் வீணாகும் எரிபொருளை குழாய் மூலம் கொண்டு வருவதால் உர உற்பத்தியில் ஒவ்வொரு ஆண்டும் மேலும் ஆறு லட்சம் டன் யூரியா அதிகரிக்கலாம். இராமநாதபுரத்தில், காவிரி படுகையில் கண்டுபிடிக் கப்பட்டுள்ள இயற்கை எரிவாயுவையும் குழாய் மூல மாக தூத்துக்குடிக்கு இணைக்கலாம். மேலும், இந்தப் பகுதியில் மிக அதிகமாக இயற்கை எரிவாயு கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்த இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல புதிய உரத் தொழிற்சாலைகளை அமைத்தால், நாட்டின் உரத் தேவை பூர்த்தியாகும் என்பதைவிட நாம் சர்வதேச சந்தையில் உரத்தை ஏற்றுமதியே செய்யலாம்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன் தெரிவித்துள்ள மற்றொரு ஆலோசனையான நிலக்கரியை பயன்படுத்துவது என்பதும் நமது நாட்டைப் பொறுத்தவரை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆலோசனையாகும். இராமகுண்டம் உரத் தொழிற்சாலை ஏற்கெனவே இந்த முறையில்தான் வடிவமைக்கப்பட்டதாகும். அதில் தற்போது சில மாற்றங்களே போதுமானது என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். நமது நாட்டில் நிலக்கரி வளம் மிக அதிகமாக உள்ளதால் சீனாவைப்போல் இந்தி யாவும் பெட்ரோலியப் பொருட்களை அண்டியிராமல் உர உற்பத்தியில் தன்னிறைவை அடையலாம். தேவை அரசின் கொள்கை உறுதிப்பாடே.


பெட்ரோல் விலையும் பித்தலாட்ட கணக்கும்


-பி.வெங்கடேஷ்

“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், இந்தியாவிலும், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை ஏற்ற வேண்டியுள்ளது” கீறல்விழுந்த ரிக்கார் டைப் போல் பிரதமரும், நிதியமைச்சரும், பெட் ரோலியத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் ஏன் தமிழ் மற்றும் ஆங்கில ஒளி மற்றும் அச்சு ஊடகங்களும் கூட இடைவிடா மல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். விலை உயர்வை தவிர்க்க இடதுசாரிகள் கொடுத்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை பரிசீ லிக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்துவிட் டது. ஜனநாயகத்திற்கு இடம் கொடுக்காத சந்தை அடிப்படைவாத உலகமய கொள்கையை மன்மோகன் சிங் அரசு அடிபிறழாமல் பின்பற் றுவதே இதற்கு அடிப்படைக் காரணம்.

விலை உயர்வை நியாயப்படுத்தி நாட்டு மக் களுக்கு பிரதமர் ஆற்றிய உரையில் ‘சர்வதேச மதிப்பில் கணக்கிட்டால் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.71க்கு விற்க வேண்டியிருக்கும். ஆனால் மக்கள் மேல் உள்ள அக்கறையின் காரணமாக ஐந்து ரூபாய் மட்டும் ஏற்றியிருக்கிறோம்’ என்று பேசியிருக்கிறார். இது சரியான பித்தலாட்டப் பேச்சாகும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71 என்றால், ஒரு பீப்பாயின் விலை 256 டாலரா கிறது. ஆனால் கச்சா எண்ணெய் ஒரு பீப்பா யின் விலையே (இன்றைய விலையில்) 135 டாலர் தான். அப்படியானால் ஏறத்தாழ 121 டாலர் சுத்தி கரிப்பு செலவு என்றாகிறது. கச்சா எண்ணெய் யை சுத்திகரிக்க இத்தனை செலவு ஆகாது என் பதுதான் உண்மை. அப்படியெனில், பெட்ரோல் விலை நிர்ணயத்தில் செய்யப்படும் பித்தலாட் டம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண் டாமா?

ஆடு நனைகிறதே... ஐயோ!

‘இறக்குமதி சமன்பாடு’ (iஅயீடிசவ யீயசவைல) என்பதுதான் இந்த பித்தலாட்டத்தின் பின்புலம். இதுஒரு புறமிருக்க ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற பகாசுர நிறுவனங்களின் அகோர லாபப்பசிக்கு மக்களை இரையாக்குவதும் நடக் கிறது. கடந்த பாஜக ஆட்சியில், அரசே பெட்ரோ லிய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறை மாற்றப்பட்டு, சர்வதேச சந்தை மதிப்பில் இனி விலை நிர்ணயிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு அடுத்த கட்டமாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க பாஜக அரசு முடிவெடுத்தது. இடதுசாரி கட்சிகளின் கடும் போராட்டத்தின் விளைவாகவும், நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என்ற உச்சநீதிமன்றம் வாஜ்பாய் அரசுக்கு ‘நச்’ சென்று குட்டு வைத்ததன் கார ணமாகவும் பொதுத்துறை எண்ணெய் நிறு வனங்களை தனியார்மயமாக்கும் முயற்சி தடுக் கப்பட்டது. அதன்பின்னர் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இடதுசாரிகளின் கடும் நிர்பந்தம் காரணமாக இந்த தனியார்மய முடிவினை அமலாக்க முடியவில்லை. ஆனால் அப்போது, தனியார்மயத்துக்கு ஆதரவாக அருண்ஷோரி & கம்பெனிக்கு முட்டுக்கொடுத்த ‘பெரிய மனிதர்கள்’ இப்போது பொதுத்துறை நிறுவனங்கள் அடைந்து வரும் நஷ்டத்திற்காக கண்ணீர் விடுகிறார்கள். ஆம், பொதுத்துறை ஆடு நனைகிறதே என்று தனியார் நரிகள் கவ லைப்படுகின்றன. அதனால்தான் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ‘வருவாய் இழப் பை’ (ரனேநச சநஉடிஎநசநைள) ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த வேண்டுமென ‘சுதந்திர சந்தை’ ஆதரவாளர்கள் கூக்குரலிடுகிறார்கள்.

புளுகுமூட்டையிலிருந்து

பூனை வெளியே வருது

இந்த விலையேற்றம் ஏன் என்ற கேள்விக் கான விடை. இப்போது தெரிகிறது. பூனைக் குட்டி புளுகு மூட்டையிலிருந்து வெளியே வந்து விட்டது. கோதாவரி- கிருஷ்ணா ஆற்றுப்படு கையில் இயற்கை எரிவாயுவை எடுக்கும் உரி மத்தை ரிலையன்ஸ் வைத்துள்ளது. கடந்த செப் டம்பர் 2007ல் ஒரு யூனிட் எரிவாயுவிற்கு 4.20 டாலர் என்று அரசு விலை நிர்ணயம் செய்ய ரிலையன்ஸ் நிர்பந்தித்தது. அப்போது சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலர். “கச்சா எண்ணெய் விலை ஏறியதால்” எரிவாயுவின் விலையை ரிலையன்ஸ் உயர்த்தியுள்ளது. இங்கேயே உற்பத்தியாகும் எரிவாயுவிற்கு, சர்வதேச மதிப்பில் விலை நிர்ணயிப்பார்களாம்! இதுதான் ‘இறக்குமதி சமன்பாடு’ எனப்படு கிறது. இந்தியாவின் பெட்ரோலியத் தேவையில் 20 முதல் 30 சதம் நம் நாட்டின் இயற்கை வளங்களிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களே ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் எடுக்கப்படும் எண்ணெய்க்கு இறக்குமதி விலை நிர்ணயித்து கொள்ளை லாபம் ஈட்ட ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற கம்பெனிகளுக்கு பேராசை இருக்கலாம், ஆனால் மத்திய அர சுக்கு மக்களைப் பற்றி கவலை வேண்டாமா?

ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் உள் நாட்டு தயாரிப்பை இறக்குமதி விலையில் விற் கையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தின் (றiனேகயடட யீசடிகவை) மீது வரி போடுங்கள் என்ற இடதுசாரி களின் கோரிக்கை நியாயமானதல்லவா? 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி என்று வாய் கிழிய பேசுகிறீர்களே, அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியை மக்களின் சுமையை குறைக்க பயன்படுத்துங்கள் என்ற இடதுசாரிகளின் வலியுறுத்தல் நியாயமானதல்லவா? எடைக்கு வரி விதியுங்கள், அதன் விலைக்கு வரி விதிக் காதீர்கள்... அப்படிச் செய்தால் சர்வதேச விலை உயர்விலிருந்து மக்களை பாதுகாக்கலாம் என்ற இடதுசாரிகளின் ஆலோசனையை ஏற்பது அறிவுடைமையல்லவா? இதையெல் லாம் செய்யாமல் “சர்வதேச விலை உயர்வு” என்ற பித்தலாட்ட காரணத்தை மன்மோகன் சிங் அரசு மீண்டும் மீண்டும் சொல்லி மக்கள் தலையில் மிளகாய் அரைக்க நினைக்கிறது. அரைத்த மிளகாயின் காரம் அரசின் கண்களை நிச்சயம் கலங்கச் செய்யும்.