April 29, 2007

மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமை நீடிக்கலாமா?

தமிழகம் முழுவதும் துப்புரவு பணி யில் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலா ளர்கள் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் தாழ்த் தப்பட்ட மக்கள் ஆவர்.திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று நகராட்சி,24 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகளில் சுமார் ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின் றனர். மனித மலத்தை மனிதன் கை யால் எடுத்து, தலையால் சுமக்கும் நிலையை 1995ம் ஆணடு தடை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணைய மும், இது மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளது. ஆனால், அதன்பின்பும் இந்நிலை இந்தியாவின் பல மாநிலங்க ளிலும் தமிழகத்திலும் தொடர்வது சுதந்திர இந்திய நாட்டில் அவக்கேடான நிலையாகும்.
மலம் அள்ளும் பணியில் அருந்ததியர் மக்கள் தான் ஈடுபடுத்தப்படுகின் றனர் என்ற செய்தி நமது நாட்டிற்கே தலைக் குனிவை ஏற்படுத்துவதாகும்.கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரண்ட் லைன் என்ற ஆங்கில ஏடு ஆய்வு செய்து இந்திய நாட்டின் அவமா னம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித் துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அகரம்,தாடிக் கொம்பு,அம்மையநாயக்கனூர், ஆயக்குடி ஆகிய பேரூராட்சிகளில் நவீன கழிப்பறை இல்லாமல் எடுப்புக் கழிப்பறையில் மனித மலத்தை மனி தன் அள்ளும் நிலை உள்ளதாக மார்க் சிஸ்ட் கட்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான கிராமங் களிலும், சேரிப் பகுதிகளிலும், நகரங் களில் தெரு ஓரங்களில் உள்ள மலத்தை அள்ளும் பணியில் துப்புரவு தொழிலா ளர்கள் குறிப்பாக,அருந்ததியர் பெண் கள் ஈடுபடுத்தப்படுவதாக தெரியவந் துள்ளது. பழனி நகராட்சியில் 15 முதல் 24 வார்டுகள் வரையுள்ள பகுதிகளி லும், திண்டுக்கல்லில் கவாடக்காரத் தெரு, ஆர்.வி. நகர், காமராஜபுரம், லைன் தெரு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் பாளையம், கக்கன் நகர், திருமலைச்சாமிபுரம் ஆகிய பகுதி களில் உள்ள கணிசமான வீடுகளில் எடுப்பு கழிப்பறைகள்தான் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேற்குவங்க அரசு ஒரு விரிவான திட்டத்தை வகுத்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அதனை முறையாக செயல்படுத்தி மனித மலத்தை மனி தன் அகற்றும் கொடுமையை அறவே தடுத்து நிறுத்தியுள்ளதை இம்மாநாடு பெருமையோடு சுட்டிக்காட்டுகிறது.

தமிழக அரசு ஆளுநர் உரையில் மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமைக்கு முடிவு கட்டப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை முடிவுக்கு கொண்டு வர போதுமான நிதி ஒதுக்கப்பட வில்லை என்பதும் கவலை அளிக்கிறது.

உலகின் வேறு எந்த நாட்டிலும் இல் லாத சமூகக் கொடுமைதான் மனித மலத்தை மனிதனே கையால் அள்ளும் நிலையாகும். சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களை இதில் இருந்து விடுவிப்பது அவசர அவசியமான கட மையாகும். தமிழ்நாட்டில் தீண்டாமை இல்லை. மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமை இல்லை. சமூக ஒடுக்குமுறை இல்லை என்ற பெரு மையை நிலை நாட்டுவதை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இதற்காக முயற்சியையும், திட்டங்களையும் அவ சரத் தன்மையும் உருவாக்குமாறு தமி ழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள் கிறது. இந்த இழி நிலையை முடிவுக்கு கொண்டு விரைந்து செயல்பட முன்வரு மாறு அனைத்து ஜனநாயக இயக்கங் களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது.

April 14, 2007

இட ஒதுக்கீடு - 27 சதம் - நீதிமன்றம் - திறமை வங்கி

க.கனகராஜ், தூத்துக்குடி

இந்திய அரசியல் சட்டத்தின் 16(14) வது பிரிவு பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்கிறது. மண் டல் கமிஷன் பரிந்துரைக்கு முன்னரும் பிற்பட்ட வகுப்பினருக்கும் பல்வேறு மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு இருந்தே வந்தது. மண்டல் கமிஷன் பரிந் துரையை அமல்படுத்துவதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 27 சதம் பிற்பட் டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க தீர்ப்பளித்தது. அது அமல்படுத்தப்பட்டு வருகிறது. பிற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக உயர்நிலை (ஊசநயஅல டயலநச) யிலுள்ளோருக்கு இவ்வொதுக் கீடு பொருந்தாவண்ணம் 27 சதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.

27சதம் ஏன்?

1931க்குப் பிறகு ஜாதி ரீதியான கணக்கெடுப் புகள் நாடு முழுவதும் நடைபெறவில்லை. ஆயினும் மண்டல் கமிஷன் இதர பிற்பட்டோரின் மக்கள் தொகை 52 சதம் எனக் கணக்கிட்டுள்ளது. சுதந் திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேல் ஜாதி ரீதியான கணக்கெடுப்பைத் தடை செய்துவிட்டார். ஆயினம் பல மாநிலங்கள் தாங்களே இதர பிற்பட் டோர் பட்டியலைத் தயார் செய்து அதன் அடிப் படையில் இடஒதுக்கீட்டை கல்வியிலும் கூட அமல் படுத்தி வந்தன. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டும் விரிவாக தயாரிக்கப்பட்ட கேள்வித் தாள் அடிப்படையிலுமே மண்டல் கமிஷன் இதர பிற்பட்டோர் 52 சதம் தரப்பட்டிருக்க வேண்டும். ஆயினும், நீதிமன்றம் இட ஒதுக்கீடு ஒட்டுமொத் தமாக 50 சதத்தை மீறக்கூடாது என தடை விதித்த தால் ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (15+7.5) 22 சதம் இடஒதுக்கீடு அமலில் இருப்பதால் இதர பிற்பட்டோருக்கு 27 சதம் (கூட்டுத் தொகை 50க்குள்) என்று முடிவு செய்யப்பட்டது.

யாருக்கு என்ன வேலை?

ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளான நாடாளு மன்றம், நிர்வாகம், நீதித்துறை இவற்றின் பணிகள் அரசியல் சட்டத்தால் தெளிவாக வரையறுக்கப்பட் டுள்ளன.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் - சட்டங்களை உருவாக்கும்

நிர்வாகம் - உருவாக்கப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும்.

நீதிமன்றம் - சட்டத்தை வியாக்கியானம் செய்யும், அமலாக்கத்தை கண்காணிக்கும்.

சமீபகாலமாக நீதிமன்றம் இதர பிரிவுகளின் அதிகாரங்களை தானே எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதற்கான பல்வேறு உதார ணங்களைச் சொல்ல முடியும். நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் தலையிட்டது அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் உள்ளவையும் நீதித்துறை யின் பரிசீலனைக்குரியதே என்பது நிர்வாகத்தின் தலையீட்டில் கடைசி உதாரணம் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 27 சதம் இட ஒதுக்கீட்டிற்கு தடை.

இட ஒதுக்கீட்டிற்கு தடை சரியா?

1. உச்சநீதிமன்றத்தின் 9 பேர் கொண்ட பெஞ்ச் வேலை வாய்ப்பில் 27 சதம் இதர பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை அனுமதித்துள்ளது. வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அனுமதிப்போம். அதற்கு அடிப்படையான கல்வியில் அனுமதிக்க மாட்டோம் என்பது என்ன நியாயம்? கல்வி நிறுவ னங்களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக் கீட்டை தடை செய்துள்ளது இருவர் கொண்ட பெஞ்ச்.

2. 27 சதம் இதர பிற்பட்ட வகுப்பினர் உள்ள னரா என்ற கேள்வி நியாயமெனில் எத்தனை சதவீ தம் உள்ளனரோ அத்தனை சதவீதமல்லவா இட ஒதுக்கீடு அனுமதிக்க வேண்டும். அதற்கு மட்டும் 50 சதம் என்கிற அடக்குமூடி எதற்கு?

3. 27சதம் வேலையில் இட ஒதுக்கீட்டை அனு மதித்திருப்பதும் உச்சநீதிமன்றம்தானே?

4. நாடாளுமன்றம் ஏறத்தாழ ஏகமனதாக (அர சியல் சட்ட திருத்தம் 93 அரசியல் சட்டத்தில் 15 (5) பிரிவை புதிதாக உருவாக்கியது. இதை நீதி மன்றம் கேள்விக்குள்ளாக்குமெனில் நாடாளு மன்றம் சட்டமன்றங்களின் வேலை என்ன?

இவையெல்லாம் நீதிமன்றம் அரசின் இதர அங்கங்களின் அதிகாரத்தில் தலையிடுவது என் பது மட்டுமல்ல. பணக்காரர்களுக்கும் முதலாளி களுக்கும் ஆதரவாக சேவகம் செய்ய முனைந் துள்ளதன் வெளிப்பாடே.

எனவேதான் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு தேசிய நீதி ஆணையம் வேண்டும் என வலி யுறுத்தியுள்ளது. நீதி ஆணையத்தின் உறுப்பினர் களாக பணியிலிருக்கும் நீதிபதிகள் மட்டும் இருந் தால் போதாது என வலியுறுத்தியுள்ளது.

இட ஒதுக்கீட்டை

எதிர்ப்போரின் வாதம்

வாதம் 1

நாட்டை சாதியாக பிரிவுபடுத்தும் நடவடிக்கை.

நியாயம் 1

இந்த வாதம் அபத்தமானது. நாட்டு மக்கள் எந்த அடிப்படையில் பின் தங்கியுள்ளனரோ அந்த அடிப்படையில்தானே நிவாரண நடவடிக்கை மேற் கொள்ள முடியும். பொருளாதார வரம்பு மட்டம் வைத்தால் ஏழை, பணக்காரன் என்ற பிரிவை உருவாக்காதா? வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது நாட்டை பூகோள அடிப் படையில் பிளவுபடுத்தி விடுமா?

வாதம் 2

வாக்கு வங்கிக்காகவே இட ஒதுக்கீடு, நாங்கள் திறமை வங்கிக்காக வாதிடுகிறோம்.

நியாயம் 2

நல்ல வார்த்தை ஜாலம், உயர்கல்வி நிறுவனங் களில் படித்தோர் எத்தனை சதம் இந்திய அரசு நிறு வனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர். பெரும்பாலும் அன்னிய நாட் டிலும் இந்தியாவில் அன்னிய நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும்தானே பணிபுரிகின் றனர். அங்கெல்லாம் இட ஒதுக்கீடே கிடையாதே? எனவே இந்தக் கேள்வி தனக்கு போட்டி வரக் கூடாது என்பதற்காகத்தானே தவிர போட்டியில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு சலுகையளித்து தங் கள் வாய்ப்பு பறிக்கப்படும் என்பதால் அல்ல.

இவர்கள்தானே வேலைவாய்ப்பில் இட ஒதுக் கீடு அமல்படுத்தப்பட்டபோது முதலில் கல்வியில் ஒதுக்கீடு செய், பின்னர் வேலைவாய்ப்பில் செய்ய லாம் என்றவர்கள்.

இன்னும் சொல்லப்போனால் இப்போது பொதுப் போட்டியில் சேர்வோருக்கான எண்ணிக்கை குறைக்கப்படாமலேயே இட ஒதுக்கீடு அமல்படுத்த வகை செய்யப்பட்டிருக்கிறது. போட்டிக்கு புதியவர் கள் வருகிறார்கள் என்பதைத் தவிர ஏற்கெனவே போட்டியிடுவோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவது என்கிற பிரச்சனையே எழவில்லையே.

இதற்கு ஏதுவாகவே மத்திய அரசு கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. குறிப்பாக, உயர் கல்விக்கு 34 சதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர் களுக்கான ஒரு இடைக்கால ஏற்பாடே இட ஒதுக் கீடு. எல்லோருக்கும் கல்வியும் வேலையும் உத் தரவாதமாக்கப்படும் வரை சமத்துவத்திற்கான போராட்டம் தொடரவே செய்யும். இட ஒதுக்கீடு எவரும் தருகிற சலுகையல்ல. மறுக்கப்பட்ட வாய்ப் புகளை பெறுவதற்கான, போட்டிக்கு தயாராவதற் கான அடிப்படை உரிமை. இது மட்டுமே போதுமான தல்ல. ஆனால், நிச்சயம் அவசியமானது. அப்போது தான் வாய்ப்பும் அதன்மூலம் வாழ்வும் மறுக்கப்பட்ட வர்கள் சமூக நீரோட்டத்தில் இதரரோடு சமவாய்ப் பில் போட்டியிடுவதற்கான அடிப்படை அதாவது வாய்ப்பில் சமத்துவம்.

April 01, 2007

நீதிமன்ற தீர்ப்புகள் : அன்றும்-இன்றும்

உலகமயமாக்கல் கொள்கை யால் விவசாயம், தொழில், கல்வி, சுகா தாரம், தொழிலாளர் நலம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து நாட்டு மக்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர், ஆசிரி யர்கள் போராடும்போது இவர்களை ஒடுக்க மத்திய - மாநில அரசுகள் தனது நிர்வாகத்தையும் போலீசையும் பயன்படுத்துகிறது.

நீதிமன்றமும் உலகமயமாக்கல் கொள் கைக்கு ஆதரவாக தனது தீர்ப்புகளை வாரி வழங்கி வருகிறது.

உலகமயமாக்கலுக்கு (1990க்கு) முன் தீர்ப்புகள்

1. போனஸ் என்பது கொடுபடா ஊதியம் ஆகும்.

2. விசாரணையற்ற வேலைநீக்கம் தவறானது.

3. பொதுத் துறைகள் தேசத்திற்கு தேவையானது.

4. வேலை நிறுத்த உரிமை உண்டு.

5. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

6. தவறான பணி நீக்கம் செய்யப் பட்ட ஊழியருக்கு தொடர் பலன் களுடன் வேலை, வேலையிழந்த நாட்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

7. ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒரு நிறுவனம் ரத்து செய்யும் போது, அதில் பணியாற்றும், ஒப்பந்த தொழிலாளர்கள், தானா கவே நிரந்தர ஊழியர்கள் ஆகி விடுவார்கள்.

உலகமயமாக்கலுக்கு (1990க்கு) பின் தீர்ப்புகள்

1. அரசு ஊழியர், ஆசிரியருக்கு வேலை நிறுத்த உரிமையில்லை.

2. ஆர்ப்பாட்டம், பேரணி, பந்த், வேலைநிறுத்தம் போன்ற ஜன நாயக நடவடிக்கைகளுக்கு தடை.

3. நிரந்தர ஊழியருக்கு இணை யாக, தினக்கூலி ஊழியரை கருத முடியாது.

4. ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியருக்கு இணையாக சம ஊதியம் உரிமை கோர முடியாது.

5. ‘தொழிலாளர் நலன்’ என்பது தொழிலாளிக்கு மட்டும் சொந்த மாகவுள்ளது. சட்டத்தில் ‘முதலாளி நலன்’ பற்றியும் இடம் பெற வேண்டும்.

6. அதிகாரியிடம் வார்த்தை மீறி பேசியதற்கு செய்த வேலை நீக் கம் சரியானது.

7. சிறிய தவறுகளுக்கு கூட (பணி யிடத்தில் தூங்கியதற்காக) பணி நீக்கம் செய்தது சரியானது.

8. பொதுத்துறை பால்கோ நிறுவ னம் தனியார்மயம் நியாயமா னது.9. டெல்லி நகரில் மின்சாரம், குடிநீர் விநியோகம் தனியாருக்கு கொடுத்தது சரியானது தான்.

10. தற்காலிக ஊழியருக்கு சேமநல நிதி திட்டம், ஈஎஸ்ஐ திட்டம் கிடையாது.

11, தற்காலிக ஊழியரை, பணி நிரந் தரம் செய்ய, வயதுதளர்வு செய்ய தேவையில்லை.

12. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழி யர் மீண்டும் பணியில் சேர்க் கப்பட்டால், இடைப்பட்ட காலத் திற்கு பணி காலமாக கருதி ஊதியம் வழங்க தேவையில்லை. பணிதொடர் ஆணையும் வழங்க தேவையில்லை.

13. சட்ட விரோத வேலை நிறுத்தத் தில் ஈடுபடும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யலாம்.

14. பணி நிரந்தரம் செய்ய தொடர் ந்து 240 நாட்கள் பணி புரிந்தது பற்றி சம்பந்தப்பட்ட ஊழியரே நிரூபிக்க வேண்டும். நிர்வாகம் அல்ல. (ஆனால் ஆவணங்கள் அனைத்தும் நிர்வாகத்திடமே உள்ளன).

15. ஒரு நிறுவனம் ஒப்பந்த தொழி லாளர் முறையை ரத்து செய்தால், அதில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டியதில்லை.

16. ஆண்டுக்கணக்கில் தினகூலி, தற்காலிக ஊழியர்களாக பணி புரிந்தாலும், நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல.

17. நிர்வாகம் யாரை வேண்டு மானாலும் நேரடியாக வேலைக்கு நியமிக்கலாம், நீக்கலாம்.

18. “சமவேலைக்கு சம ஊதியம்” என்பதை இயந்திர ரீதியாக பார்க்கக் கூடாது.

19. தொழிலில் ஏற்படும் பிரச்சனை களை தொழிலாளர் கோணத் தில் இருந்து மட்டும் பார்ப்பது சரியில்லை. தொழில் நடத்தும் முதலாளி கோணத்திலும் பார்க்க வேண்டும்.

20. தனியார் சுய நிதி கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்து உத்தர விட்ட அரசு உத்தரவை ரத்து செய்தது.

21. ஒப்பந்த அடிப்படையில் நியமிக் கப்பட்ட 1880 கம்ப்யூட்டர் ஆசிரி யர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டது. ‘இவர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணி நிரந்தரம் செய்ய தேவையில்லை’ என கூறி அரசு உத்தரவை ரத்து செய்தது.