March 08, 2007

பின் நீ என்ன கடவுள்?

என்னென்னவோ நடக்கிறது பூமியில்.
பின் நீ என்ன கடவுள்?"
மனிதனின் கேள்வி உரத்து ஓலித்தது.
கடவுள் நேரில் வந்தான்,
"இப்படி நேரில் வந்துதான் உன்னை நீ
நிருபிப்பாயெனில்,
பின் நீ என்ன கடவுள்?"
மனிதனின் அடுத்த கேள்வி.
கடவுள் இப்போது வாய்திறந்தான்:
"என்னால் எதையும் சரிப்படுத்த முடியும்."
"எதுவும் வந்தபிறகு சரிப்படுத்துவாயோ?
வருமுன் காக்க முடியாதெனில்,
பின் நீ என்ன கடவுள்?"
மனிதன் மறுபடி கேட்க
மறைந்தே போனான் கடவுள்.

அ.குமரேசன்.
தீக்கதிர்

No comments: