எப்பொழுது விடியல்?, எங்கே விடியல்?
ரவன்தாபாய் காம்பளே தன் ஆறு வயது மகனிடம் பேசி பல மாதங்கள் ஆகிறது, புரிபாயின் நிலையும் இதுவே.இது மகராஸ்ட்ரா மாநிலத்தின் கோண்டியா மாவட்டத்தில் வசிக்கும் பல நுறு பெண்களின் அவலநிலை. இவர்களால் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே வீட்டில் கழிக்கமுடிகிறது , அதுவும் நடு இரவில். வாரத்திற்கு 1000 கி.மீ. மேல் பிரயாணம் செய்ய வேண்டியுள்ளது வெறும் 30 ரூபாய் ஒரு நாளைக்கு சம்பாதிக்க.இவர்கள் ஒன்றும் கிரமத்திலிருந்து நகரத்திற்க்கு குடிபெயரும் அகதிகள் அல்ல, ஒரு காலத்தில் நகர்புரத்தில் பீடி தொழிற்சாலைகளில் வேலைப்பார்த்து, அத்தொழில் நசிந்ததால் அறுகாமயில் இருக்கும் கிராமங்களில் விவசாய கூலிகளாக வேலை தேடி அலையும் ஏழைகள், தினமும் 20 மணி நேரத்தை தன் வீட்டை விட்டு வெளியே கழிக்கும் பரிதாபத்துக்குரியவர்கள்.
இப்பெண்களின் ஒரு நாள் வேலை பளுவை சற்றே பார்ப்போம்.
விடிகாலை நான்கு மணிக்கே எழுந்து குழ்ந்தைகள் துங்கும்பொழுதே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, ஐந்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட கி.மீட்டர் நடந்தால் ரயில் நிலையத்தை அடையலாம். பசியிலும் அரை தூக்கத்திலும் ரயிலின் துறு ஏறிய தரையில் அமர்ந்து இரண்டு மணி நேரம் - 78 கி.மீ பயணித்தால் சல்வா கிராமத்தை 9 மணிக்கு அடையலாம், இங்கு பசி அமர ஒரு விவசாய வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.
இவர்கள் ரயிலில் பயணச்சீட்டு எடுப்பதேயில்லை , அப்படி எடுக்கும் பட்சத்தில் இவர்களது தினக்கூலியான 30 ரூபாய்க்கு மேல் தேவைப்படும். ஒரே ஆறுதல் பயணச்சீட்டு சோதிப்பாளர். இவருக்கு தெரியும் இப்பெண்களால் பயணச்சீட்டு எடுக்க இயலாது என்று. அகப்படும் வேலைகளில் 5 ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்டு விட்டுவிடுவார்.
சல்வா கிழக்கு விதார்பாவில் உள்ள சிறிய கிராமம். பிரச்சனைக்குரிய B.T காட்டன் பகுதியை விட்டு சற்று தொலைவே உள்ளது என்றாலும் இங்கும் உலகமயமாக்கலின் தாக்கம் கடுமையாகவே உள்ளது. இங்கு பெண்கள் பெரும்பாலும் களைப் பிடுங்கவே ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மாலை 5.30மணி வரை வேலைப் பார்த்தபின் 3 அலலது 4கி.மீ வயல்வேளியில் நடந்தால் மறுபடியும் ரயில் நிலையம். ஆனால் ரயில் இரவு 8 மணிக்குதான் வரும். இரண்டு மணி நேரம் பயணித்து, ஒரு மணி நேரம் நடந்தால் இரவு 11மணிக்கு மேல் வீட்டை அடைந்தால் குடும்பத்தினர் அனைவரும் அவரவர் வேலைக் களைப்பில் அயர்ந்து துங்குவதையே கானலாம்.
நான்கு மணி நேரம் தூக்கம் ஆட்க்கொண்டால் மறுபடியும் காலை 4 மணி, தூங்கும் குழந்தைகள், நடைப்பயணம், ரயில், வேலை ........... வாழ்க்கை சக்கரம் சுழல தொடங்கும்.
வெறும் 30 ரூபாய் பெற 170 கி.மீட்டகள் பிரயானித்து தன் வாழ்க்கையை தொலைக்கும் இப்பெண்களின் வாழ்வில் எப்பொழுது விடியல்?,எங்கே விடியல்?.
நன்றி பி.சாயநாத், தி ஹிந்து.
No comments:
Post a Comment