நீதியின் படுகொலை
இராக்கின் எண்ணெய் வளத்தை களவாடுவதற்காக, பொய்யான புகார்களைகூறி அந்த நாட்டை ஆக்கிரமித்த அமேரிக்க - பிரிட்டன் அரக்க அரசுகள் அந்த நாட்டின் நீதித்துறையையும் ஆக்கிரமித்தது. அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த சதாம் உசேனை கைது செய்து விசாரனை என்ற பெயரில் வெட்கம்
கெட்ட முறையில் நாடகம் ஒன்றை நடத்தினர். இதன் கடைசிக் காட்சியாக சதாம் உசேனை தூக்கில்போட்டு தனது வெறித்தனத்தின் கோரமுகத்தை ஏகாதிபத்தியம் வெளிப்படுத்தியுள்ளது. 'ஏகாதிபத்தியம் மனித குலத்தின் விரோதி' என்று மாமேதை லெனின் கூறியதான் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர் தனத்தை ப.ஜ.க வைத் தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் கண்டித்துள்ளன.
இராக்கை ஆக்கிரமித்ததில் தொடங்கி,சதாம் உசேன் தூக்கிலிட்டு கொல்லப்பட்டது வரை ஐ.நா. சபை நடந்துக்கொண்ட விதம், அது ஒரு உலக அமைப்பு என்ற நம்பகத்தன்மையை இழந்து அமேரிக்காவின் கைப்பாவை என்ற எண்ணத்தையே ஏற்படுத்துக்கிறது.
ஆனால் நம் மத்திய அரசு , ஏமாற்றமளிக்கிறது, துரதிருஷ்டவசமானது என்ற வார்த்தைகளுடன் தனது வருத்தத்தை முடித்துக்கொண்டது, அமேரிக்காவின் மனம் நோகாமல் நடந்து கொள்ளவேன்டும் என்ற எண்ணத்தையே இது வெளிப்படுத்துகிறது.
இராக்கில் இன்று நடந்தது உலகின் எந்த நாட்டிலும் இனி நடக்கக்கூடாது.
வல்லரசு நாடுகளை எதிர்த்து வளர்முக நாடுகள் ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை இராக் துயரம் எடுத்துக் காட்டியுள்ளது.
உலகப்பந்தை அமேரிக்க ஓநாய் கபளீகரம் செய்ய அனுமதிக்ககூடாது.
No comments:
Post a Comment