BJP யும் பதவிவெறியும்
மறுபடியும் மூன்று வறுடங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஆர்எஸ்எஸ்-ன் ஆசியுடன் அயோத்தியில் கோவில், பொது சிவில் சட்டம் மற்றும் 370வது பிரிவை நீக்குதல் போன்றவை மீண்டும் பிரதான கோஷங்களாக எழும் முயற்சி நடந்து வருவது ஆச்சரியத்தைத் தரவில்லை.
மேலும், சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.இதற்காக 2026ஆம் ஆண்டை காலக்கெடுவாகவும் குறித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் யார் அந்த ராஜ்நாத்சிங் என்று கேட்குமளவுக்கு இருந்த அவர்,தற்போது நாட்டின் பிரதமருக்கான போட்டியில் களத்தில் இறங்கியுள்ளார்.போட்டியிலிருந்து விலகிக் கொள்வது பற்றி அத்வானியும் முடிவெடுக்கவில்லை. இந்த பட்டியலில் வாஜ்பாயின் பெயரும் உள்ளது, தேர்தலில் இனி போட்டியிடப் போவதில்லை என்று அவர் கூறியிருந்தது பதிவு செய்யப்பட்ட ஒன்று.
2009ஆம் ஆண்டில் வாஜ்பாயும், அத்வானியும் 80 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் பிரதமர் பதவிக்கு தனக்குப் போட்டியாக வேறு யாறும் இருக்கப் போவதில்லை என்ற கணக்கில்தான் ராஜ்நாத்சிங் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார். ஆர்எஸ்எஸ்-ம் அவருக்கு தனது முழு ஆதரவை அளிக்கும். இதனால்தான் சர்ச்சைக்குரிய மூன்று பிரச்சனைகளையும் ராஜ்நாத்சிங் முன்வைத்துள்ளார்.
ராஜ்நாத்சிங் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்துத்துவா என்பது வாக்குகளைப் பெற்றுத் தருவதில் ஒரு குறிப்பிட்ட அளவே பலன் தரும். அவர் முன் நிறுத்தும் மூன்று விஷயங்களையும் ஆட்சியில் இருந்தபோது கிடப்பில் போட்டிருந்தது அவருக்கு நினைவிருக்கும். தற்போது பதவி நாற்காலி தொலை தூரத்தில் இருக்கும்போது, கோவில் அங்கேயே கட்டுவோம் என்ற பாடலை அவர் தயக்கமில்லாமல் பாடலாம்.ஆனால் 2009ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.
- 'தி இந்து ' தலையங்கத்தின் (டிச.26) பகுதிகள்.
No comments:
Post a Comment