இழிவு பெரியாருக்கு இல்லை !
மதவெறி அமைப்புகளுக்கு பெரியாரின் சிந்தனைகள் இன்னமும் சிம்ம சொப்பனமாகவே உள்ளது என்பதன் வெளிப்பாடுதான் ஸ்ரீரங்கத்தில் திறக்கப்படவிருந்த அவரது சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவமாகும்.1973ம் ஆண்டு முயற்சி மேற்க்கொள்ளப்பட்டு 1996ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளைத் தீர்ப்பின் அடிப்படையில் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பா.ஜ.க துவங்கி இந்து முன்னனி வரை ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை அமையக்கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
திண்டிக்கல்லில் பெரியார் சிலைக்கு விபுதிப்பட்டை பூசி இழிப்படுத்திய நிகழ்ச்சியும் சில மாதம் முன் நடந்தது.
சமுகத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பு, மேலும் கருத்து மோதல்களில்தான் புதிய கருத்துக்கள் பிறந்துள்ளன். ஆனால் கருத்துக்களை எதிர்க்கொள்ள முடியாதவர்கள்தான் வன்செயலில் இறங்குகிறார்கள்.இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கவேண்டும்.
இச்சிறுமையான செயலை நியாயப்படுத்தியுள்ளதோடு வன்முறையை தூண்டும் வகையில் திருச்சியில் பேசியுள்ளார், பா.ஜ.க தலைவர்களில் ஒருவராகிய எச்.ராஜா.
பெரியார் உயிருடன் வாழ்ந்து பகுத்தறிவு பிரச்சாரம் செய்த காலத்தில் விழுந்த பூமாலைகளைவிட அவமரியாதைகள்தான் அதிகம். இப்போது பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக்கொண்டார்கள்.
இழிவு பெரியாருக்கு இல்லை, இச்சிறுமையான செயலை செய்த சிறியவர்களுக்கும் அவர்களது இயக்கங்களுக்கும்.
5 comments:
anbulla ezhilukku,
un tamil sevai unmaiyil potruthalukku uriyathu.silaikalin mel nambikkai illatha periyarukku silai vaippathal enna proyojanam.athai periyar uyirodu irunthal aatharippara? athai vida thiravida katchigal avarin karuthu putthagangal achittu ilavasamaga viniyogikkalaame?
வாழ்வின் அடிப்படைத் தேவைகளைத் தேடி கடல் தாண்டி வந்தும்
பெரியாரின் சிந்தனைகளுக்கு கட்டுப்பட்டு வாழும் என் போன்றவர்களுக்கு தமிழ் நாட்டில் உயிர் வாழும் பெரியார்கள் தான் வழிகாட்டி.
பெரியாரின் வழி செல்வோம்.
Nanbere,
ungal rediffmail blogil parthu , asaiyaga tamilil ezhutha vantha enakku ematramthan.
Naan en karuthhinai veLippaduthha ingu vandha adhey nimidam uma-vin karutthinaip padithhen. En ennangaLai avar appadiyey pradhipalithhuLLaar. vikkiraga vazhipaattinai saadiya periyaar-ukkey vikkiraga vazhipaadu seiyyum 'thoNdargaLai' ennavendRu neengaL azhaippeergaL?
periyaarukku idhai vida periya izhukku irukka mudiyumO? SatRey sindhitthup Paarum naNbaray! :)
Naan en karuthhinai veLippaduthha ingu vandha adhey nimidam uma-vin karutthinaip padithhen. En ennangaLai avar appadiyey pradhipalithhuLLaar. vikkiraga vazhipaattinai saadiya periyaar-ukkey vikkiraga vazhipaadu seiyyum 'thoNdargaLai' ennavendRu neengaL azhaippeergaL?
periyaarukku idhai vida periya izhukku irukka mudiyumO? SatRey sindhitthup Paarum naNbaray! :)
~PenaPunaivan :)
Post a Comment