December 10, 2006

நுழைக்கப்பட்ட நுழைவுத்தேர்வு

மிழகத்தில் பொது நுழைவுத் தேர்வை ரத்துச் செய்வதற்கான சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டிருப்பது, மேல்நிலைப் பள்ளி இருதித் தேர்வில் வென்றாலும், தொழிற்கல்வியில் சேர நுழைவுத்தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சிபெற்றாக வேண்டும் என்ற கொடுமைக்கு முடிவுகட்ட வழிவகுக்கும்.


குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கும், சமுகரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் எதிரான நடைமுறைதான் நுழைவுத் தேர்வை.


“தகுதி”, “திறமை” என்ற தந்திரமான வாதங்களின் மூலம் பெரும்பகுதி மக்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்திய சமுகத்தில் புரையோடிப்போன சாதிப்பாகுபாட்டுக் கயமையின் நுட்பமான ஏற்பாடாகவே நுழைவுத்தேர்வு நுழைக்கப்பட்டது.


நுழைவுத்தேர்வுதான் தகுதியையும் திறமையையும் தீர்மானிக்கும் என்றால் தேர்வு வாரியமும் தேவையில்லையே! 12ம் வகுப்புத் தேர்வும் தேவையில்லையே! மேலும் இயல்பான புரிதலோடு வளர வேண்டிய மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கான செயற்கையான முன்தயாரிப்பு என்ற பெயரில் வருத்தெடுக்கிற குரூரமும் அதிலே இருக்கிறது.


கல்வி வாய்ப்பில் சமுக நீதி என்ற கோட்பாட்டிற்கே பகையான நுழைவுத் தேர்வு முறையை நீக்குவது என்ற திமுக அரசின் முடிவு போற்றி வரவேற்கப்படவேண்டியது.


No comments: