December 19, 2011

கடந்த 10 ஆண்டுகளில் 2.15 லட்சம் விவசாயிகள் தற்கொலை

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 2.15 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயி கள் பிரச்சனைக்குத் தீர்வு காண சிறப்பு நாடாளுமன்ற அமர்வு நடத்த வேண்டும் என எம்.பி.க்கள் வியாழக் கிழமையன்று வலியுறுத் தினர். வேளாண்துறையில் மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் திட்டக் குழுவும் காரணம் என எதிர்க் கட்சிகள் கடுமையாக மாநிலங்களவையில் குற்றம் சாட்டின.

வேளாண் துறை பிரச் சனைக்கு அரசையும் அரசியல் கட்சிகளையும் குற்றம் சாட்டிய பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு, வேளாண் துறை மீது ஊட கங்களும் பாராமுகமாக இருந்துள்ளன என்று குற்றம் சாட்டினார்.

ஆண்டு இழப்பாக விவசாயிகள் ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்திக் கிறார்கள். விவசாயத்திற்கு வாங்கியக் கடனை திரும்பக் கட்ட முடியாமல், அவர் கள் தற்கொலை செய்துள் ளனர் என்றும் அவர் தெரி வித்தார்.

உணவு தானிய இயக் கம், வேளாண் பொருட் களை ஏற்றுமதி செய்ய தடை, உற்பத்தி விலையைக் காட்டிலும் மிக குறைவான ஆதார விலையை நிர்ண யித்தல், உரவிலை அதி கரிப்பு போன்ற பல்வேறு பின்னடைவுகளால் விவ சாயிகள் கடன் நெருக் கடிக்கு ஆளாகி, உயிர் இழக்கும் நிலை உள்ளது என்றும் அவர் கூறினார். இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண சிறப்பு நாடாளு மன்ற அமர்வை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments: