June 17, 2007

சென்னை ஐ.ஐ.டி.யில் தொடரும் வர்ணாசிரம அதர்மம்

மத்திய அரசு நிதியில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் வடக்கில் தலித்துகள் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்பது அநேகமாக அனை வரும் அறிந்த உண்மை. ஆனால், இட ஒதுக்கீட் டுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்ற தமிழகத் தில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.-யிலும் தலித்துகள் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் மிகவும் இழிவாக நடத்தப்படுகின்றனர் என்பதை இவ்வார ‘டெகல்கா’ வார இதழ் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களில் தலித்துகள் 11.9 சதவீதத்தினர் மட்டுமே யாவர். உயர்கல்வி பயில்வோரில் இந்த சதவீதம் இன்னும் குறைவாகும். உதாரணமாக எம்.எஸ். (ஆய்வு) மாணவர்களில் 2.3 சதவீதமும், பி.எச்டி. மாணவர்களில் 5.89 சதவீதமுமே தலித்துகளாவர். மொத்தம் இந்நிறுவனத்தில் பயிலும் 4687 மாண வர்களில் 559 பேர்கள் மட்டுமே - அதாவது 8.3 சதவீதத்தினரே - தலித்துகள் ஆவார்கள். சுமார் 250 ஹெக்டேர் நிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இக்கல்வி நிறுவனத்தின் துறை களில் ஆசிரியர்களும் மாணவர்களும் பிரா மணர்களே ஆவார்கள்.

தலித்துகளின் உரிமைகளுக்காகக் கடுமையாகப் போராடுபவரும் இந்நிறுவனத்தில் கணிதத்துறையில் உதவிப் பேரா சிரியராகப் பணியாற்றுபவருமான வசந்தாகந்த சாமி என்பவர், இங்குள்ள அனைத்துத்துறைகளி லும் பணியாற்றும் ஆசிரியர்களில் வெறும் நால்வர் மட்டுமே தலித்துகள் என்றும், இது மொத்த எண் ணிக்கையில் 0.86 சதவீதம் மட்டுமே என்றும் கூறுகிறார்.

அதேபோன்று பி.எச்டி. பட்டத்திற்குப் பதிவு செய் யப்பட்டுள்ள தலித் மாணவர்கள் மிகவும் கொடு மையாக நடத்தப்படுவதாகவும் வசந்தா கூறுகிறார். ஆராய்ச்சிப் படிப்பை அவர்கள் தொடர்ந்து கொண் டிருக்கும் போது திடீரென்று இடைநிலையில் ஆராய்ச்சிப் பாடத்தின் தலைப்பை மாற்றக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களை ஒழுங்காக முடிக்க விடுவதில்லை என்றும், எழுத்துத் தேர்வுகள் மற்றும் வாய்மொழித் தேர்வுகளி லும் அவர்களைத் தோல்வியடையச் செய்து விடுகிறார்கள். தலித் மாணவர்களைப் பொறுத்தவரைக் கும் ஐஐடி சூழல் மிகக் கொடுமையானதாகும் என்று வசந்தா மேலும் கூறுகிறார்.

இவ்வாறு வசந்தா தலித் மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதால் நிர்வாகத்திற்கு அவரைப் பார்த்தாலே கசப்பாக இருக்கிறது. எனவேதான் கடந்த பதினேழு ஆண்டுகளாக எவ் வித பதவி உயர்வும் இன்றி உதவிப் பேராசிரிய ராகவே அவர் உழன்று வருகிறார். சர்வதேச அள வில் அவர் பல சாதனைகளைப் படைத்திருந்த போதிலும், அவர் இதுவரை 640 ஆய்வுத் தாள்களை வெளியிட்டிருந்தபோதிலும் அதுபற்றியெல்லாம் நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை.

சுஜி தெப்பால் என்ற ஒரு மாணவி. இண்டர் மீடியட் தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதி யியல் பாடங்களில் 94 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். அகில இந்திய அளவில் புகழ்பெற்ற ராஞ்சியில் உள்ள பிட்ஸ் நிறுவனத்திலும், பிலானி யில் உள்ள பிட்ஸ் நிறுவனத்திலும் கூட இவருக்கு இடம் கிடைத்தது. ஆயினும் இவர் சென்னை ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருந்ததால் அங்கு மட்டும் விண்ணப் பித்தார். ஆயினும் அவர் அந்த அளவிற்கு மதிப் பெண்களைப் பெற்றிருந்தும், அவர் தலித் என் பதால், தலித் மாணவர்களுக்கான “முற்பயிற்சி வகுப்பில்” (“யீசநயீயசயவடிசல உடிரசளந”) சேர்ந்து ஓராண்டு படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டார். பயிற்சியின் முடிவில் வைக்கப்பட்ட தேர்வில் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக் கப்பட்டிருக்கிறார். என்னே கொடுமை!

ஐஐடி இயக்குநரான எம்.எஸ். ஆனந்த் ஒரு பிராமணர் என்றும் ஐஐடி-யில் துறைகளுக்கான தலைவர்களைத் தேர்வு செய்யும்போது தன் சொந்த சாதியிலிருந்தே தேர்வு செய்வார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.அன்பரசு குற்றம் சுமத்தியிருக்கிறார். இந்நிறுவனத் தின் மொத்தம் உள்ள ஆறு முதல்வர்களில் நால்வர் பிராமணர்கள் என்றும் அனைத்து விதி முறைகளையும் மீறி இவ்வாறு ஆனந்த் இவர்களை நியமனம் செய்திருக்கிறார் என்றும் அன்பரசு குற் றச்சாட்டில் மேலும் குறிப்பிட்டிருக்கிறார். தன் குற் றச்சாட்டை மத்திய மனிதவள அமைச்சர் அர் ஜூன் சிங்கை சந்தித்தபோது இரா.அன்பரசு தெரி வித்திருக்கிறார். அர்ஜூன் சிங் கும் இது குறித்து புலனாய்வுக்கு உத்தரவிடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆனால் எதுவுமே நடைபெற வில்லை.

அன்பரசு குற்றச்சாட்டு குறித்து என்ன சொல் கிறீர்கள் என்று கேட்பதற்காக ‘டெகல்கா’ நிருபர் எம்.எஸ்.ஆனந்தையும் அவரது செயலாளரையும் சந்திக்க முயற் சித்திருக்கிறார். ஆயினும், இவை குறித்து கருத்துக் கூற இயக்குநர் கிடைக்க வில்லை என்று செயலாளர், நிருபரிடம் தெரிவித் துள்ளார்.

June 02, 2007

பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு

பாரதிய ஜனதா கட்சியின் அரசு என்பது மக்கள் பிரச்சனைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காது என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாகத் தான் ராஜஸ்தான் சம்பவங்கள் உள்ளன.

இம்மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான குஜ்ஜார் இனமக்கள் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து விலக்கி பழங்குடியின மக்கள் பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்காக கடந்த ஓராண்டு காலமாகப் போராடியும் வருகின்றனர்.

2003 ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேர வைக்கு கடந்த தேர்தலில் குஜ்ஜார் இன மக்களை பழங்குடி இனப்பட்டியலில் சேர்ப்பதாக பாஜக வாக் குறுதி அளித்திருக்கிறது.கடந்த 4 ஆண்டுகளாக தந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் இப்போது நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக தேர்தல் அறிக்கையில் இப்படி எந்த வாக் குறுதியும் அளிக்கவில்லை என்று ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராராஜேயும் அம்மாநில உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியாவும் அடித் துப் பேசுகிறார்கள். இது அச்சடித்த வாக்குறுதியாக இல்லாமல் இருக்கலாம். மேடைப்பேச்சுகளில் அளித்ததாகவும் இருக்கலாம் என்று பட்டிமண்டபம் நடத்திக் கொண்டிருக்கும் நேரமல்ல இது.

மக்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. குஜ்ஜார் இன மக்களின் வாழ்நிலைப்படி அவர்களை எஸ்.டி.யாக அறிவிப்பதில் தவறில்லை என்பதால்தான் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பணி வேகத்தில் நடப்பதால்தான் மக்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்ட அணிதிரண்டுள்ளனர். மூன்று மாவட்டங்களில் நடந்த போராட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் பேர் திரண்டிருந்தனர் என்றால் அவர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சரோ உயர் நிலை அதிகாரியோ பேசியிருக்க வேண்டாமா என்ற கேள்வி நியாயமானது.

ஆனால்,மக்கள் ஒன்று பட்டு உரிமை கேட்பதை பாஜக அரசு விரும்புவதில்லை. ஏற்கெனவே ராஜஸ் தானில் ஏழை சிறுவிவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் பாசனத்திற்காகத் தண்ணீர் கோரி முற்றுகைப்போராட்டம் நடத்தினார்கள். இதனை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அரசு காவல் துறையை ஏவி கடுமையாகத் தாக்குதல் நடத்தி விவசாயிகளை படுகொலை செய்தது. விவ சாயிகள் மீது ஏற்கெனவே பாஜக அரசினால் ஏவி விடப்பட்ட போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், பாஜகவினர் கொஞ் சம் கூட வெட்கமில்லாமல் நந்தி கிராமத்தில் நடந்த நிகழ்வுகளை ஊதி பெரிதாக்கி அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இப்போது அதையும் மிஞ்சி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 14 பேரை பலி வாங்கியுள்ளது. மக்கள் பிரச்சனை மீதான பாஜக அரசின் அலட்சியப் போக்கை அராஜக அணுகுமுறையை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. இந்த கட்சி மத்தி யில் ஆண்ட போதும் மற்ற சில மாநிலங்களில் ஆட்சி செய்த போதும் மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்ததால்தான் ஆட்சிக்கட்டிலிலிருந்து அகற்றப்படும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அதிலி ருந்து பாஜக பாடம் கற்றதாகத் தெரியவில்லை. இந்தக் கட்சிக்கு நிச்சயமாக எதிர் காலத்தில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். பலி யானோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.