November 23, 2007

ஊடகங்களின் உள்ளடி வேலை

ஊடகங்களின் உள்ளடி வேலை
-ஜி.இராமகிருஷ்ணன்
“நந்திகிராமில் பிரச்சனைக்கு காரணமே ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையின் பிடிவாதம்தான்”- தினமணி, 16.11.2007

“நந்திகிராமம், ஜாலியன் வாலாபாக் படு கொலையை ஞாபகப்படுத்தும் இன்னொரு இட மாக மாறியிருக்கிறது”- தினகரன், 18.11.2007

“நிலம் கையகப்படுத்துவதை எதிர்க்க முனை பவர்கள் கையாண்ட வழிமுறைகள் சற்றும் ஏற்க முடியாதவை; அவை அதிகாரத்தையே அர்த்தமற் றதாக்கி, சட்டம் - ஒழுங்கை தூசியாக மதித்து அவர்கள் செய்தவை குற்றங்கள். இப்போது மேற்கு வங்க அரசு அடியாட்களை ஏவி போலீஸ் துணை யுடன் புரிந்திருப்பதும் அராஜகமே! மீட்பு பணி என்ற பெயரில் மீளாத அவப்பெயரை பெற்றிருக்கிறது மார்க்சிஸ்ட் அரசு”- துக்ளக், 28.11.2007

“நந்திகிராம் கிராமங்களை மீண்டும் கைப்பற் றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் முழுவதும் சட்டவிரோதமானது; ஏற்றுக் கொள்ள முடியாதது”- கோபால கிருஷ்ண காந்தி, மேற்குவங்க ஆளுநர், இந்து - 10.11.2007

இவை தவிர பல தொலைக்காட்சிகளும் நந்தி கிராமை பற்றி ‘மேற்குவங்க அரசு நந்திகிராமத் தில் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எடுத்த முயற்சியை எதிர்த்து விவசாயிகள் போராடுகிறார் கள்’ என்று திரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

உண்மை என்ன?

நந்திகிராமத்தில் வேதியியல் தொழில் வளாகம் துவங்குவதற்கு ஒருபகுதி மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்த பிறகு கடந்த பிப்ரவரி மாதம் நந்தி கிராமத்தில் தொழில் வளாகம் துவங்குவதை கைவிடுவதென மாநில அரசு முடிவு செய்து அறி வித்து விட்டது. இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வும் இதே கருத்தை முடிவாக அறிவித்தது. இருப் பினும், பூமி பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்தவர்களும், மாவோயிஸ்ட் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வர்களும் மற்றும் சில அமைப்புகளும் நந்திகிராம் உள்ளிட்ட பல கிராமங்களை ஆக்கிரமிப்பு செய்து அக்கிராமங்களில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குடும்பங்களைச் சேர்ந்த குழந்தை கள், முதியவர்கள் உள்ளிட்ட 3500க்கும் மேற்பட் டோரை அடித்து விரட்டி விட்டனர். இவர்கள் கடந்த பல மாதங்களாக நிவாரண முகாம்களில் அகதிகளாக தங்கி இருந்தனர். இதனால் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து நந்திகிராமம் பகுதியில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கூட போட இயலவில்லை. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தங்களுடைய வழக்கமான பணி யில் ஈடுபட முடியவில்லை. ஒட்டுமொத்தத்தில் அப்பகுதியை மேற்குவங்கத்திலிருந்து துண்டிக் கப்பட்ட ஒரு பகுதியாக மாற்றி ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் கும்பல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இத்தகைய நிலைமையை மாற்று வதற்கு மாநில காவல்துறையினர் சென்றபோது தான் துரதிருஷ்டவசமாக 14 பேர் இறந்த வருந் தத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு பிறகு அரசு பல அமைதி முயற்சிகளை மேற்கொண்ட போதும், கிராமங்களை விட்டு வெளியேறியவர்கள் திரும்ப இயலாத நிலை நீடித்தது. இந்நிலையில்தான் விரட்டப்பட்ட 3500 பேரும் சில தினங்களுக்கு முன்புதான் கிராமங்களுக்கு திரும்பினர். இப் போது சகஜ வாழ்க்கை அங்கே நிலவி வருகிறது.

வெளியேறியவர்கள் மீண்டும் கிராமங்களுக்கு வந்திருப்பதை, ‘கிராமங்களை மீண்டும் கைப்பற்று வது சட்ட விரோதமானது’ என்று மாநில ஆளுநர் வர்ணித்திருக்கிறார். ‘மீண்டும் கைப்பற்றுவது’ சட்டவிரோதம் என்றால், உள்ளூர்வாசிகளை பல வந்தமாக வெளியேற்றிவிட்டு, மாவோயிஸ்ட்டு களும், மம்தா கட்சியைச் சேர்ந்தவர்களும் நந்தி கிராமை கைப்பற்றியதை சட்டபூர்வமானதென ஆளுநர் கூறுகிறாரா? ஆளுநர் தனது வரம்பை மீறி விட்டார் என டெலிகிராப், இந்து போன்ற நாளேடுகளே விமர்சித்திருக்கின்றன.

18.11.2007 தேதியிட்ட தினகரனில் வெளியான ஒரு கட்டுரையில், ‘நந்திகிராமத்தில் நிலவும் நிலைமையை ஜாலியன் வாலாபாக்குக்கு ஒப் பிட்டு எழுதப்பட்டிருக்கிறது’

இந்த ஆண்டு ஜனவரியில் துவங்கி, நந்தி கிராம் பகுதியில் இதுவரையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 30 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 9 மாதங்களாக 3500 பேர் தங்களது சொந்த கிராமங்களிலிருந்து வெளியேறி வேறிடங்களில் அகதிகளாக வசித்து வந்த நிலைமை இருந்தது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ‘தினகரன்’ நாளேடு வெளியேறியவர்கள் வீடு திரும்பியதைத் தான் ஜாலியன் வாலாபாக்குடன் ஒப்பிட்டு எழுது கிறது. நந்திகிராமத்தில் நிலம் எடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிப்ரவரி மாதமே மேற்குவங்க அரசு அறிவித்த பிறகும், இன்னமும் நந்திகிராமத்தில் நிலமெடுப்பதற்கு மேற்குவங்க அரசு முயற்சிப்பதாகவும், அதை எதிர்த்து மக்கள் போராடுவதாகவும் உண்மைக்கு புறம்பாக எழுதுவது பத்திரிகை தர்மமாகுமா?

துக்ளக் கருத்து பற்றி விளக்கமளிக்கத் தேவையில்லை! கம்யூனிஸ்ட் எதிர்ப்பு கண்ணை மறைக்க அவதூறு பரப்புவதே அதன் வேலை.

ஒரு நாட்டில் ஜனநாயகத்தை காக்கக்கூடிய தூண்களில் ஒன்றாக ஊடகங்கள் உள்ளன. அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்று தூண்களும் ஜனநாயகத்தை காக்கத் தவ றுகிறபோது, நடுநிலையாக நின்று ஜனநாயகத் தின் நான்காவது தூணாக ஊடகங்கள் செயல்பட வேண்டும். ஆனால், ஊடகங்களில் ஒரு பகுதி திசை மாறி கம்யூனிஸ்ட்டுகள் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றன.

இத்தகைய போக்கு வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல.

1971ல் துவங்கி 6 ஆண்டு காலம் காங்கிரஸ் தலைமையில் ஒரு அரை பாசிச ஆட்சி மேற்குவங் கத்தில் நடந்ததையும் 3000க்கும் மேற்பட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் ஊடகங்கள் இதுவரையில் உண்மையாக ஏற்கவில்லை. மேற்குவங்கத்தில் அரை பாசிச ஆட்சி துவங்கியபோது, இது மேற்கு வங்கத்தோடு நிற்காது. மற்ற மாநிலங்களுக்கும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது கட்சி காங்கிரஸ் தீர் மானம் கூறியது. இதைத்தான் அவசர நிலை பிரக டனம் என்ற கசப்பான அனுபவத்தை நாடு முழு வதும் மக்கள் சந்தித்தனர். மறைந்த ஜெயப்பிர காஷ் நாராயணன் கூட, முதலில் நம்ப மறுத்து மேற்குவங்கத்திற்கு அவர் சென்றபோது, அவரு டைய காரை தாக்குவதற்கு காங்கிரஸ் கட்சியினர் முயற்சித்தபோது அவர் புரிந்து கொண்டார்.

1968 டிசம்பர் 25ஆம் நாள் வெண்மணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குழந் தைகள், முதியோர்கள், பெண்கள் உள்ளிட்டு 44 தலித்துகள் நிலச் சுவான்தார்கள் தலைமையிலான குண்டர்களால் உயிரோடு எரிக்கப்பட்ட கோர மான நிகழ்ச்சியை டிசம்பர் 27 ஆம் நாள் தினமணி “கிசான்களுக்கிடையில் மோதல்- 42 பேர் பலி” என உண்மையை மறைத்து செய்தியாக வெளியிட்டது. வெண்மணி சம்பவத்தைத் தொடர்ந்து தினமணி தீட்டிய தலையங்கத்தில் பக்கிரிசாமி என்ற ஒரு வரை கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டு செய்த கொலையின் எதிர்வினைதான் 44 பேர் பலி; எனவே, எண்ணிக்கையை வைத்து குழம்பி விடக் கூடாது என 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தி ஏ.என். சிவராமன் தீட்டிய தலையங்கத்தை கம்யூனிஸ்ட்டுகளால் எப்படி மறக்க முடியும்.

இத்தகைய திட்டமிட்ட நிகழ்ச்சிகளை பரி சீலிக்கிறபோது, 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கக் கூடிய மேற்குவங்க இடது முன்னணி அரசையும்; அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உறுதியாக சமர சமற்ற முறையில் எதிர்த்து போராடி வரும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது சாரி இயக்கத்தையும் பிளவுபடுத்த, அழிக்க ஏகா திபத்தியம் பின்னாலிருக்கிறதோ என்ற ஐயம் இயல்பாகவே ஏற்படுகிறது.

இத்தகைய கருத்தை 22.11.2007 அன்று ‘இந்து’ பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி ஊர்ஜிதப்படுத்துகிறது.

மேற்குவங்க நண்பர்களுக்கு வேண்டுகோள் என்ற தலைப்பில், அமெரிக்காவைச் சேர்ந்த சாம்ஸ்கி உள்ளிட்ட தலைசிறந்த, மனித நேய மிக்க உலகளவிலான அறிவு ஜீவிகள் வெளியிட் டிருக்கக் கூடிய அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளனர்.

“உலக சக்திகளின் இன்றைய வலிமை நிலைகள் காரணமாக, இடதுசாரி சக்திகளைத் துண்டாடுவது ஒரு மூர்க்கத்தனமான பாதிப்பு களுக்கு இட்டுச் சென்றுவிடக்கூடும். ஒரு நாட்டின் (இராக்) அரசைத் தகர்த்த ஒரு உலக மகா ஆதிக்க சக்தி, இப்போது இன்னொரு நாட் டையும் (ஈரான்) தகர்ப்பதற்குத் தயாராகி வருவ தைப் பார்க்கிறோம். எனவே, வேறுபாட்டிற்கான அடிப்படைகள் இனியும் இல்லை என்ற நிலை யில், இது பிரிந்து நிற்பதற்கான தருணம் அல்ல.”

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கை ஒன்றும் புதிதல்ல. 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையி லான கூட்டணி வெற்றி பெற்று விடக்கூடாது என் பதற்காக சி.ஐ.ஏ. யாருக்கெல்லாம் நிதி கொடுத் தது என்பது வரலாறு.

இந்திய தேசம் விடுதலையடைந்து 60 ஆண் டுகள் ஆகியும் விவசாயிகள் தற்கொலை, வறுமை, வேலையின்மை போன்று பிரச்சனைகள் தொடர் கிறபோது, ஒரு இடதுசாரி மாற்று உருவாவதை தடுக்கவே கம்யூனிச விரோதிகள் முயற்சிக்கின் றனர். இடதுசாரிகளும், ஜனநாயகவாதிகளும், மதச்சார்பற்ற சக்திகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.
----------------------------
மாற்றுக்கருத்து உள்ளவர்கள் எனக்கு எழுதவும்(ezhilans@rediffmail.com)