செகாவத்தின் இலட்சனம் !
ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சியுறக் கூடிய வகையில், ஐக்கிய முற்போக்குக் கூட் டணி வேட்பாளருக்கு எதிராக பாஜகவினர் கட்டவிழ்த்து விட்டுள்ள மிகவும் கீழ்த்தரமான முறையி லான பிரச்சாரம் மிகமிகத் தாழ்ந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த ஸ்தானமான, குடியரசுத் தலைமைப்பதவிக்குப் போட்டியிடுபவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற் படுத்தும் விதத்தில் அவர் மீது சேறை அள்ளி வீசு வதன் மூலம் உண்மையில் தங்களையே மிகவும் தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்.
நாட்டின் அரசமைப்புச் சட் டத்தின் மிக உயர்ந்த அலுவலகமான குடியரசுத் தலைமையகத்திற்கு எந்தஅளவிற்கு மிகக் குறைவாக பாஜக மதிப்பளிக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவெனில், பாஜக தங்கள் வேட்பாளரைப் பாதுகாக்கும் வண்ணம் கூறும் விவரங்கள்தான்.
செகாவத், 1942 இல் காவல்துறையில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார் என்று பாஜக செய்தித் தொடர் பாளர், சுஷ்மா ஸ்வராஜ், நாட்டிற்குத் தெரிவித்தி ருக்கிறார். அதுமட்டுமல்ல, 1948இல் அவர் பதவி யிலிருந்து விடுவிக்கப்பட்டபோது அவருக்கு அளிக்கப்பட்ட பணிவிடுவிப்புக் குறிப்பையும் தாக்கல் செய்திருக்கிறார். அதில் செகாவத் காவல் உதவி ஆய்வாளராக இருந்த போது ஆற்றிய பங்களிப்பு குறித்து மிகவும் போற் றத்தக்க முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ் வாறு செய்திருப்பதன் மூலம், சுஷ்மா ஸ்வராஜ், செகாவத்தின் வேட்புமனுவுக்குத் தீங்கு செய்தி ருப்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ நாட்டில் 1942இல் தொடங்கப்பட்டது என் பதை நாட்டில் உள்ள அனைவரும் அறிவார்கள். அவ்வியக்கத்தின்போது, லட்சக்கணக்கான சுதந் திரப் போராட்ட வீரர்கள் காவல்துறையினரின் கடும் சித்ரவதைக்கு உள்ளானார்கள். இந்தக் காலகட்டத்தில் ஒருவர் காவல்துறையில் சேவகம் செய்தார் என்பதற்கும், சுதந்திரம் பெற்றபின் அவர் தன்னுடைய பணிக்காலத்தில் மிகவும் சிறப்பாகப் பணியாற்றினார் என்ற குறிப்புடன் பணியிலிருந்து வெளிவந்தார் என்பதற்கும் உண்மையில் பொருள் என்ன? செகாவத் காவல்துறையில் சேவகம் செய்ததன் மூலமாக, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டார் என்று பொருள்படுவதை உள்ளபடியே சுஷ்மா ஸ்வராஜ் அறிந்திருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் RSS இயக்கத்தின் பங்களிப்பு எவ்வாறாக இருந்ததென்பது அனைவரும் அறிந்த ரகசியமே.
1942 வெள்ளையனே வெளியேறு இயக் கத்தின்போது, பம்பாய் உள்துறை, கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது: “சங் பரிவாரம், சட்டத்திற்குட் பட்டு துளியும் பிறழாமல் செயல்படுகிறது. குறிப்பாக 1942 ஆகஸ்ட்டில் நடைபெற்ற கிளர்ச் சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற் கிறது.”சுஷ்மா ஸ்வராஜ், செகாவத்தை இவ்வாறு தூக்கிநிறுத்துவதன் மூலம், விடுதலை போராட்டத் தின்போது RSS ஆற்றிய பங்களிப்பினை சரியென்று ஒப்புக் கொள்கிறார் என்றே தோன்றுகிறது.
எனவே, பாஜக, ஐக்கிய முற்போக்குக் கூட் டணி வேட்பாளருக்கு எதிராக சேறை வாரி இறைப்பதென்பது, உண்மையில் தற்போதைய துணைக் குடியரசுத் தலைவராகவுள்ள, தன் சொந்த வேட்பாளருக்காக, பண்பற்ற கருத்து மாறுபாடுகளை உருவாக்குவதற்கே உதவுகிறது.
